சென்னை: உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனத்துக்கு 2030 வரை மாநில ஜி.எஸ்.டி. 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிட்டார். தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மின்சார வரி விலக்கும் அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment