பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் பின் பகுதியில் குழந்தைகள் வார்ட் உள்ளது இந்த குழந்தைகள் வார்டடில் உள்ள பவர் போர்ட் இருக்கும் இடத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. மின்கசிவு ஏற்பட்ட உடனே அந்த அறையில் புகை பரவியுள்ளது. இதனை பார்த்த குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் அலறியடித்து கொண்டு வெளியில் வந்துள்ளனர். அப்போது அங்குள்ள கண்ணாடி கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததால் அதனை உடைத்து கொண்டு அனைவரும் வெளியேறினார். புகை ஏற்பட்ட உடனே மருத்துவமனையின் டீனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடந்து மருத்துவர் உதயகுமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள உபகரணங்களை கொண்டு புகை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மின்கசிவு ஏற்பட்ட இடத்தில் மின் பணியாளர்கள் மூலம் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மின்கசிவு குறித்து பழனி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தை வார்டில் மின்கசிவு காரணமாக புகை வெளியேற தொடங்கியவுடன் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 70 குழந்தைகள் மற்றும் 30 கர்ப்பிணி பெண்கள் உடனடியாக வெளியேறினர். இதனால் அங்கு ஏதும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அந்த வார்டில் இருந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அங்கங்கே அமர்ந்துள்ளனர். மேலும் மின்கசிவு சரி செய்யப்பட்ட உடன் அவர்கள் மீண்டும் அந்தந்த வார்டுகளில் அனுமதிக்கப்படுவர் என மருத்துவமனை டீன் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment