தூத்துக்குடி: நவம்பர் 9ல் நடக்க உள்ள திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இவற்றைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக சூரசம்ஹாரம், திருக்கால்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருச்செந்தூரில் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நவம்பர் 4 - 8 வரை தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
from Dinakaran.com |27 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment