திருப்பத்தூர்: அமைச்சர் பதவியை பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு கே.சி.வீரமணி எதுவும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடத்தி மத்திய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது. தனது கல்லூரிக்காக மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விதிமீறலை தைரியமாக செய்தவர் தான் அமைச்சர் வீரமணி. கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார் அமைச்சர் கே.சி.வீரமணி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொள்ளை அடித்த கே.சி.வீரமணியை தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
from Dinakaran.com |29 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment