சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், PPF, KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று வட்டியை குறைத்து அறிவித்த நிலையில் இன்று வாபஸ் பெறப்படுகிறது.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment