ஈரோடு: ஈரோடு அருகே மாத்திரை சாப்பிட்டு 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எனக்கூறி மாத்திரை கொடுத்து 3 பேரை பக்கத்து வீட்டுக்காரரே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் வசித்த மல்லிகா, குப்பம்மாள், தீபா மாத்திரை கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கும் மாத்திரை கொடுத்து கொலை செய்தது மல்லிகா பக்கத்து வீட்டில் வசித்த கல்யாணசுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. மல்லிகாவிடம் வாங்கிய ரூ.6.5 லட்சம் கடனை திருப்பிக் கேட்டதால் அவரது குடும்பத்துக்கு விஷமாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் மல்லிகா குடும்பத்துக்கு விஷ மாத்திரை கொடுத்த சபரி என்ற கல்லூரி மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மாத்திரை கொடுக்க வைத்ததாக சபரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment