ஜவுளிக்கடை உரிமையாளருக்கு விதிகப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுளாக குறைப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஜவுளிக்கடை உரிமையாளருக்கு விதிகப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுளாக சென்னை உயர்நீதிமன்றம் குறைத்தது. சென்னை பம்மலைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் தாமோதரனின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் வழங்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று தற்கொலைக்கு தாமோதரன் முயன்றார். குடும்பத்தினரை கொன்ற தாமோதரனுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து இருந்தது. தூக்கு தண்டனையை எதிர்த்து தாமோதரன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment