தூத்துக்குடி: தூத்துக்குடியில் மனைவி உட்பட 3 பேர் மீது அமிலத்தை விசியவரை போலீஸ் தேடி வருகிறது. அசோக் நகரை சேர்ந்த ரவி(50) தனது மனைவி மாலா(49) மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று இரவு சூசை மச்சாது (48), மகன் கெர்பின்(19) இருவரும் மாலாவுடன் பேசி கொண்டிருந்தபோது ரவி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதால் வீட்டில் இருந்த அமிலத்தை எடுத்து ரவி வீசியதில் மாலா, சூசை, கெர்பின் 3 பெரும் படுகாயமடைந்தனர். காயமுற்ற மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய ரவியை தூத்துக்குடி சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment