சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஜெ.லோகநாதன் சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எம்.டி.கணேச மூர்த்தி சென்னை பெருநகர காவல் தலைமையக ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்.ராஜேந்திரன் தூத்துக்குடி பேரூரணியில் உள்ள காவலர் பணியமர்வு பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம். டி.பி.சுரேஷ்குமார் திருநெல்வேலி நகர காவல் சட்ட ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக இடமாற்றம். எஸ்.செந்தில் சென்னை பூவிருந்தவல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் 3-வது அணியில் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.
from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment